search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் ரெயில் தடம் புரண்டு 12 பயணிகள் காயம்
    X

    ராஜஸ்தானில் ரெயில் தடம் புரண்டு 12 பயணிகள் காயம்

    ராஜியசார் பகுதியில் சென்ற போது ரெயிலின் 4 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் 12 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
    பிகானிர்:

    பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் இருந்து ராஜஸ்தானின் ஜோத்பூர் செல்லும் பதிண்டா-ஜோத்பூர் பயணிகள் ரெயில் நேற்று அதிகாலையில் ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் சென்று கொண்டு இருந்தது. சுமார் 2 மணியளவில் ராஜியசார் பகுதியில் சென்ற போது ரெயிலின் 4 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் 12 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.

    ரெயில் தடம் புரண்ட தகவல் அறிந்ததும் அங்கு சென்ற ரெயில்வே உயர் அதிகாரிகளும், போலீசாரும் உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் காயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜியனராம் மேற்பார்வையிட்டார்.

    ரெயிலில் இருந்த பிற பயணிகள் சாலை வழியாக தங்கள் ஊருக்கு புறப்பட்டனர். இந்த விபத்தால் அந்த பாதையில் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஜம்முதாவி உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×