search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் 6 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்
    X

    காஷ்மீரில் 6 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு வாபஸ்

    சட்டம்– ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு காஷ்மீரில் 6 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் புரான் வானி கடந்த ஜூலை 8–ந் தேதி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை கண்டித்து பிரிவினைவாதிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காஷ்மீர் நோவாட்டா பகுதியில் உள்ள ஜாமியா மசூதி நோக்கி பேரணி நடத்தப்படும் என்று பிரிவினைவாதிகள் சமீபத்தில் அறிவித்தனர்.

    எனவே, சட்டம்– ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு காஷ்மீரில் 6 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நிலைமையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, நேற்று காலை ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இருந்தாலும், பொது மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை.

    ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்டதை தொடர்ந்து, வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின. கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. 
    Next Story
    ×