search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ள நோட்டுகள் புழக்கம்: 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளில் எச்சரிக்கை தேவை-ரிசர்வ் வங்கி
    X

    கள்ள நோட்டுகள் புழக்கம்: 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளில் எச்சரிக்கை தேவை-ரிசர்வ் வங்கி

    கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்து வருவதால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
    நாட்டில் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பது கவலையளிப்பதாக ரிசர்வ் வங்கி உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் "நாட்டில் தொடர்ந்து கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மக்கள் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.

    நல்ல நோட்டுகளில் அதிகளவு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதால் மக்கள் கள்ள நோட்டுகளை எளிதில் அடையாளம் காண முடியும். இது பற்றிய கூடுதல் விவரங்களை ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளது.

    மேலும், கள்ள நோட்டை புழக்கத்தில் விடுபவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
    Next Story
    ×