search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாய்க்கு தப்பிய இறைச்சி ஏற்றுமதியாளரை கைது செய்ய டெல்லி கோர்ட்டு தடை
    X

    துபாய்க்கு தப்பிய இறைச்சி ஏற்றுமதியாளரை கைது செய்ய டெல்லி கோர்ட்டு தடை

    டெல்லியில் இருந்து துபாய்க்கு தப்பிய இறைச்சி ஏற்றுமதியாளரை கைது செய்ய டெல்லி கோர்ட்டு தடை விதித்தது. நவம்பர் 22-ந் தேதி அவர் அமலாக்கப்பிரிவு முன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    டெல்லியில் இருந்து துபாய்க்கு தப்பிய இறைச்சி ஏற்றுமதியாளரை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்தது.

    உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் மொயின் குரோஷி. இவர் அங்கு சாதாரண இறைச்சி கடை வைத்து இருந்தார். பின்னர் டெல்லிக்கு வந்து கடை போட்டார். இங்கு அவருக்கு வியாபாரம் சூடு பிடித்தது. டெல்லியில் பல இடங்களில் எலைட் மீட் ஷாப் என்ற பெயரில் நிறுவனங்களை தொடங்கினார்.

    இதில் புகழ்பெற்றார் பணமும் செல்வாக்கும் சேர்ந்தது. அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாளர் ஆனார். அவர்களுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இறைச்சி வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரிய தொழில் அதிபர் ஆனார்.

    அவர் தனது நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்தார். அவரும் அவரது மனைவியும் முன்பு சி.பி.ஐ. இயக்குனர்களாக இருந்த ரஞ்சித் சின்கா, ஏ.பி.சிங் ஆகியோரை பலமுறை சந்தித்துப்பேசியுள்ளனர். இந்த நெருக்கத்தை பயன்படுத்தி வருமானவரி மோசடியிலும் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் புதிய அதிகாரிகள் வந்ததால் குரேசியின் மோசடிகள் பற்றி விசாரணை நடத்தினர். அவர் மீது வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் அவரை தேடப்படும் குற்றவாளியாக அமலாக்கப்பிரிவு அறிவித்தது. இதையடுத்து குரேஷி டெல்லியில் இருந்து துபாய்க்கு விமானத்தில் தப்பிச்சென்றார். இதற்கிடையே நவம்பர் 16-ந் தேதி குரேஷி அமலாக்கப்பிரிவு முன் ஆஜராக சம்மன் அனுப்பியது இதனால் அவர் கைதாகும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து அமலாக்கப் பிரிவு சம்மனை எதிர்த்து குரேஷி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நவம்பர் 16-ந் தேதி வரை குரேஷியை கைது செய்ய தடை விதித்தது. நவம்பர் 22-ந் தேதி அவர் அமலாக்கப்பிரிவு முன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
    Next Story
    ×