search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி சண்டை: இந்தியாவின் பதிலடியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 3 பேர் பலி

    காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 3 பேர் கொல்லப்பட்டனர்.
    ஜம்மு:

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடந்த மாதம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு பின்பு காஷ்மீர் மாநில எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 40 முறை இதுபோல் இந்திய எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டி இந்திய ராணுவ நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதல் 8 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

    பாகிஸ்தானின் அத்துமீறிய இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

    இதுபற்றி நேற்று இரவு ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்திய அதே ரக ஆயுதங்களைக் கொண்டு நமது வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டை இன்னும் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் தரப்பில் 2 முதல் 3 வீரர்கள் பலியாகி இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்து இருக்கிறது. நமது தரப்பில் யாரும் உயிர் இழக்கவோ, காயம் அடையவோ இல்லை” என்றார்.

    அதே நேரம் ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ்.புரா செக் டார் பகுதியில் சர்வதேச எல்லையையொட்டி சுசேத்கார் என்னும் இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய பீரங்கிகள் மூலம் நேற்று மாலை தாக்குதல் நடத்தியது.

    இதில் பல குண்டுகள் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது விழுந்து வெடித்துச் சிதறின. அப்போது அந்த வீட்டில் இருந்த ஒரு சிறுமி உள்பட 6 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 6 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு ஜம்மு நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
    Next Story
    ×