search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்க முயற்சி செய்யவில்லை: பிரகாஷ் ஜவடேகர்
    X

    சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்க முயற்சி செய்யவில்லை: பிரகாஷ் ஜவடேகர்

    சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்க முயற்சி செய்யவில்லை என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
    புது டெல்லி:

    எட்டாம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாயமாக தேர்ச்சி பெறச் செய்வதை மாற்றி, 5-ம் வகுப்புவரை மட்டுமே `ஆல் பாஸ்' திட்டம் பின்பற்றப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு தெரிவித்ததற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது.

    இந்நிலையில் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கு கூட்டத்திற்குப் பின் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் "சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்க முயற்சி செய்யவில்லை. 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.சமஸ்கிருதம் தொடர்பான சில குழப்பங்கள், தவறான கருத்துக்கள் இருந்ததால் தெளிவுப்படுத்தப்பட்டது" என்றார்.

    இந்தக் கூட்டத்தில் தமிழகம் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை, எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி போன்றவற்றை வலியுறுத்திய தமிழக அமைச்சர்கள், சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்கவும், தனி ஒரு பாடமாக அறிமுகப்படுத்தவும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், புதிய கல்விக் கொள்கையின் 36 அம்சங்களுக்கும் தமிழகத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×