search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்தது பஸ்: 4 பேர் பலி- 30 பேர் காயம்
    X

    பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்தது பஸ்: 4 பேர் பலி- 30 பேர் காயம்

    ஒடிசாவில் பயணிகள் பேருந்து ஒன்று பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் இருந்து அத்மல்லிக்கு 40-க்கும் மேற்பட்ட பயணிகளு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் துகுடா அருகே பாலத்தின் வழியாக சென்றுகொண்டிருக்கும் போது எதிரே பைக் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த பைக் மீது மோதல் இருப்பதற்காக பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் பாலத்தை உடைத்துக் கொண்டு 15 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

    தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திலேயே 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. 30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் செல்லும் வழியிலேயே இறந்தனர். 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×