search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாத சம்பளம் பெறுவோருக்கு வரி பிடித்தம் பற்றி எஸ்.எம்.எஸ். தகவல் சேவை: அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார்
    X

    மாத சம்பளம் பெறுவோருக்கு வரி பிடித்தம் பற்றி எஸ்.எம்.எஸ். தகவல் சேவை: அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார்

    மாத சம்பளம் பெறுவோருக்கு வரி பிடித்தம் பற்றி எஸ்.எம்.எஸ். தகவல் சேவையை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார்
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் சுமார் 2½ கோடி மாத சம்பளதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை வரி பிடித்தம் (டி.டி.எஸ்.) செய்வது பற்றி செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பும் சேவையை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இச்சேவையை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘மாத சம்பளதாரர்கள், வரி பிடித்தம் பற்றிய எஸ்.எம்.எஸ். தகவலையும், தங்களது சம்பள ரசீதையும் ஒப்பிட்டு பார்த்து, சரியாக வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறியலாம். ஏதேனும் முரண்பாடு இருந்தால், வரியை பிடிக்கும் தங்களது நிறுவனத்தை அணுகி கேட்கலாம்’ என்றார்.

    இதுபோல், மாத சம்பளதாரர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வரியை, வருமான வரித்துறையிடம் செலுத்த தவறும் நிறுவனங்களுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட உள்ளது. உரிய தேதியில் வரியை செலுத்துமாறு அதில் அறிவுறுத்தப்படும்.

    விரைவில், இந்த சேவையை மாதாந்திர அடிப்படையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் அளிக்க உள்ளது. அத்துடன், மாத சம்பளதாரர்கள் அல்லாத, இதர 4 கோடியே 40 லட்சம் பேருக்கும் இச்சேவையை அளிக்க திட்டமிட்டுள்ளது.

    Next Story
    ×