search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாடா சன்ஸ் சேர்மன் சைரஸ் பி.மிஸ்ட்ரி நீக்கம்: மீண்டும் தலைவர் ஆனார் ரத்தன் டாடா
    X

    டாடா சன்ஸ் சேர்மன் சைரஸ் பி.மிஸ்ட்ரி நீக்கம்: மீண்டும் தலைவர் ஆனார் ரத்தன் டாடா

    டாடா சன்ஸ் தலைவராக இருந்த சைரஸ் பி.மிஸ்ட்ரி திடீர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரத்தன் டாடா இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    மும்பை:

    டாடா குழுமத்தின் டாடா சன்ஸ் ஆலோசனை கூட்டம் மும்பை நகரில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் சைரஸ் பி.மிஸ்ட்ரி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

    மேலும் ரத்தன் டாடா இடைக்கால தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலைவரை தேர்வுக் குழு முடிவு செய்யும் வரை ரத்தன் டாடா இடைக்கால தலைவராக நீடிப்பார்.

    இந்த தேர்வு குழுவில், ரத்தன் டாடா, வேனு ஸ்ரீனிவாசன், அமித் சந்திரா, ரோனென் சென் மற்றும் லார்டு குமார் பட்டாச்சார்யா ஆகியோர் உள்ளனர். இந்த தேர்வு நான்கு மாதத்தில் தனது பணியை முடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீக்கப்பட்ட சைரஸ் பி.மிஸ்டரி டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஆறாவது தலைவராக இருந்து வந்தார். டாடா பெயரில் அல்லாத இரண்டாது தலைவர் இவர்.

    இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனம் டாடா. இந்த குழுமத்திற்கு உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பலவிதமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ரத்தன் டாடா பொறுப்பு வகித்தார். அதன்பின்னர் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகிக் கொள்ள, சைரஸ் மிஸ்திரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

    கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் தலைமை பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் அந்த குழுமத்தில் ஏற்பட்ட சில சிக்கல்களால் சைரஸ் மிஸ்திரிக்கு சிக்கல் உருவானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சைரஸ் இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×