search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூன்று முறை தலாக் கூறும் விவகாரத்தை அரசியலாக்க கூடாது: பிரதமர் மோடி வலியுறுத்தல்
    X

    மூன்று முறை தலாக் கூறும் விவகாரத்தை அரசியலாக்க கூடாது: பிரதமர் மோடி வலியுறுத்தல்

    மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
    லக்னோ:

    இஸ்லாமிய வழக்கப்படி "தலாக்' என்ற வார்த்தையை பிரயோகித்து விவகாரத்து செய்து கொள்ளும் நடைமுறை குறித்த விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மஹோபா பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக பேசியுள்ளார்.

    பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

    மூன்று முறை தலாக் கூறும் விவகாரத்தை அரசியல் பிரச்சனையாக பார்க்கக் கூடாது. பெண்களுக்கும் சமமான உரிமை அளிக்க சரியான முடிவு எடுக்கப்பட வேண்டும்.

    சில கட்சிகள் முஸ்லீம் பெண்களின் அடிப்படையான உரிமைகள் பறிக்கப்படுவதை தக்க வைக்க விரும்புகிறது. இந்த விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியல் எனக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

    தொலைபேசி மூலம் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்வது சரியானது தானா?. ஒரு இஸ்லாமிய பெண்ணின் வாழ்க்கை பறிக்கப்படவில்லையா? இந்த விவகாரம் நிச்சயம் அரசியலாக்கப்படக் கூடாது.

    பெண்களின் உரிமைகள் தொடர்பான விவகாரத்தை இந்து முஸ்லீம் பிரச்சனையாக மாற்ற வேண்டாம் என்று விவாதங்களில் பங்கேற்பவர்களை கேட்டுக் கொள்கிறேன். பெண்களின் உரிமை என்பது வளர்ச்சி தொடர்பானது ஆகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×