search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்து ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தை உத்தமபிரதேசமாக மாற்றுவேன்: பிரதமர் மோடி
    X

    பத்து ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தை உத்தமபிரதேசமாக மாற்றுவேன்: பிரதமர் மோடி

    மாறி மாறி ஆட்சி செய்து வரும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளை தோற்கடித்தால், பத்து ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தை உத்தமபிரதேசமாக மாற்றுவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அம்மாநிலத்தின் மஹோபா பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில் பேசிய மோடி, மாறி மாறி ஆட்சி செய்து வரும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளை தோற்கடித்தால், பத்து ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தை உத்தமபிரதேசமாக மாற்றுவேன் என்று தெரிவித்தார்.

    மேலும், மோடி பேசியதாவது:-

    உத்திரபிரதேசத்தில் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. விளைச்சலுக்கு உகந்த நிலமாக இருந்தபோதிலும், விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.

    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தங்களது ஆட்சி காலத்தில் ஊழல் செய்துள்ளன. ஒருவர் ஆட்சிக்கு வந்தால் மற்றவர் மீது நடவடிக்கை ஒருபோதும் எடுப்பதில்லை.

    ஆட்சி அதிகாரம் தொடர்ந்து இருகட்சிகளிடையே மாறி வருகிறது. இந்த விளையாட்டில் உத்திர பிரதேசம் தனது ஆற்றலை அடைய முடியவில்லை.

    இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளை வெளியேற்ற வேண்டும். வருகின்ற தேர்தலில் 2014 மக்களவை தேர்தலை போன்று மக்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை அளிப்பார்கள்.

    உத்திரபிரதேச மண் நம்முடைய தாய் போன்றது. நம்முடைய தாய் சூறையாடப்படுவதற்கு விடக் கூடாது. புந்தெல்காந்த் பகுதியில் சில திட்டங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இங்கு எந்த பணிகளும் செய்யப்படவில்லை.

    உத்திரபிரதேச மாநிலம் நிறைய பிரதமர்களை நாட்டிற்கு அளித்துள்ளது. என்னையும் இங்கிருந்து தான் அனுப்பியது. எல்லா பிரதமர்களும் சேர்ந்து செய்ததை காட்டிலும் அதிகமாக செய்ய விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×