search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்னுடைய நீக்கம், சமாஜ்வாடி கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சி: சிவ்பால் யாதவ்
    X

    என்னுடைய நீக்கம், சமாஜ்வாடி கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சி: சிவ்பால் யாதவ்

    அமைச்சரவையில் இருந்து என்னை நீக்கியது, சமாஜ்வாடி கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சி என்று சிவ்பால் யாதவ் தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

    உத்தரப்பிரதேசம் சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பாவான சிவ்பாலுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.

    இதனிடையே, சித்தப்பா சிவ்பால் யாதவ் உள்ளிட்ட நான்கு பேரை அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

    இதனையடுத்து அகிலேஷ் யாதவிற்கு ஆதரவாக இருந்த அவரது மற்றொரு சித்தப்பாவான ராம்கோபால் வர்மாவை முலாயம் சிங் யாதவ் கட்சியை விட்டு 6 வருடங்களுக்கு நீக்கி உத்தரவிட்டார். இதனால், இன்றைய உத்திரபிரதேசம் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

    இந்நிலையில், அமைச்சரவையில் இருந்து தன்னை நீக்கியது, சமாஜ்வாடி கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சி என்று சிவ்பால் யாதவ் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    முலாயம் சிங் யாதவ் தலைமையில் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம். அகிலேஷ் யாதவ் தன்னுடைய நலம் விரும்பிகளை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது என்பதை கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும்.

    ராம்கோபால் சமாஜ்வாடி கட்சியில் இருந்தும், பொதுசெயலாளர் பொறுப்பில் இருந்தும் 6 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் எனக்கு எதிராக சதி செய்து கொண்டிருக்கிறார்.

    அகிலேஷ் தன்னுடன் யார் இருக்க வேண்டும், இருக்க கூடாது என்பதை கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு சிவ்பால் தெரிவித்தார்.
    Next Story
    ×