search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத்தில் ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது
    X

    ஐதராபாத்தில் ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது

    ஆந்திர மாநில தலைநகரான ஐதராபாத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஐதராபாத்:

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தை ஆந்திர மாநில தலைநகரான ஐதராபாத்தின் புறநகர் பகுதியான அன்னோஜிகுடா பகுதியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று தொடங்கி வைத்தார்.

    அகில பாரத காரியகரினி மண்டல் என்ற தலைப்பில் வரும் 25-ம் தேதிவரை நடைபெறும் இந்த கூட்டத்தில் 42 மாநிலங்களை சேர்ந்த இவ்வமைப்பின் பிரதிநிதிகளும், மேலிட தலைவர்களும் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் சமீபகாலமாக பா.ஜ.க.வினர் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக இன்றைய கூட்டத்தில் பேசியவர்கள் குற்றம்சாட்டினர்.

    நாட்டில் தற்போது நிலவிவரும் சமூக, பொருளாதார, அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்படும் இந்த கூட்டத்தில் பாரதிய விவசாய சங்கம், அகில பாரத வித்யா பரிஷத் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்கின்றனர்.

    இந்த கூட்டத்தின் நிறைவில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறைவுநாள் மாநாட்டில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா பங்கேற்ககூடும் என சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. எனினும், இதுதொடர்பாக பா.ஜ.க. தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
    Next Story
    ×