search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவபால் யாதவ் உள்பட 4 மந்திரிகள் நீக்கம்: அகிலேஷ் யாதவ் அதிரடி
    X

    சிவபால் யாதவ் உள்பட 4 மந்திரிகள் நீக்கம்: அகிலேஷ் யாதவ் அதிரடி

    உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தனது மாமா சிவபால் யாதவ் உள்பட நான்குபேரை தனது மந்திரிசபையில் இருந்து நீக்கியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. மாநில அமைச்சரவையில் முலாயம் சிங்கின் சகோதரர் சிவபால் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்.

    உத்தரப்பிரதேசம் சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பாவான சிவபாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு முக்தார் அன்சாரி என்பவரின் கட்சியை சமாஜ்வாதி கட்சியுடன் இணைக்க சிவபால் விரும்பினார்.

    ஆனால், அதை அகிலேஷ் யாதவ் ஏற்க மறுத்து விட்டார். இதனால் அதிருப்தி அடைந்த சிவபால் கட்சியில் இருந்து விலக முயன்றார். அவரை முலாயம்சிங் சமரசம் செய்து வைத்தார்.

    மாநில மந்திரிசபையில் சிவபால் பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனம், வருவாய், மற்றும் கூட்டுறவுத்துறை ஆகியவற்றை வகித்து வந்தார். அந்த பதவிகளை அகிலேஷ் பறித்தார். முக்கியத்துவம் இல்லாத சமூக நலத்துறையை அவருக்கு கொடுத்தார்.

    இந்நிலையில், உ.பி. மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையில் லக்னோ நகரில் நடைபெற்றது.

    இந்த கூட்டம் முடிந்ததும் வெளியேவந்த மாநில விளையாட்டுத்துறை மந்திரி ராம் கரன் ஆர்யா, மாநில மந்திரிசபையில் இருந்து அகிலேஷ் யாதவின் மாமா சிவபால் யாதவ், நரட் ராய். ஷதாப் பாத்திமா மற்றும் ஓம் பிரகாஷ் சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அமர்சிங்குடன் தொடர்பு வைத்திருக்கும் யாரும் தனது மந்திரிசபையில் இருக்க கூடாது என எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தின்போது கூறிய அகிலேஷ் யாதவ் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக உள்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

    Next Story
    ×