search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்வே துறையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும்: மோடி
    X

    ரெயில்வே துறையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும்: மோடி

    ரெயில்வே துறையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும் என வதோதராவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
    வதோதரா:

    குஜராத் மாநிலம் வதோதரா விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய முனைய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பசுமை விமான நிலையங்கள் பட்டியலில் இரண்டு விமான நிலையங்கள் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஒன்று கொச்சியில் உள்ளது, மற்றொன்று இப்போது வதோதராவில் அமைந்திருக்கிறது. இதுபோன்ற திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத கட்டுமானங்களை நிறுவுவதற்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். புதிய விமான போக்குவரத்து கொள்கை, விமான போக்குவரத்துத்துறை வளர்ச்சிக்கு உதவும்.

    மேலும், சுற்றுலாத்துறை வளர்ச்சியில் விமான போக்குவரத்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது நாட்டின் ரெயில்வே துறையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும். இந்தியாவின் முதல் ரெயில்வே பல்கலைக்கழகம் விரைவில் வதோதராவில் அமைய உள்ளது. அது செய்யும் பங்களிப்பை கற்பனை செய்து பாருங்கள்

    இந்தியாவில் சுற்றுலா துறைக்கு வரம்பற்ற வாய்ப்புகள் உள்ளது. அதில் வதோதராவும் முக்கிய பங்களிக்கும் என நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×