search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி விழாவில் சந்திரபாபுநாயுடுவிடம் மாணவி லஞ்ச புகார்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
    X

    பள்ளி விழாவில் சந்திரபாபுநாயுடுவிடம் மாணவி லஞ்ச புகார்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

    முதல்வர் சந்திரபாபுநாயுடுவிடம் மாணவி நேரடியாகவே லஞ்ச புகார் கூறியதால் பள்ளி விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

    நகரி:

    விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த டிஜிட்டல் வகுப்பறை திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் சந்திர பாபுநாயுடு பங்கேற்றார். வகுப்பறையை திறந்து வைத்து அவர் மாணவ- மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    மேலும் அவர்களின் கருத்துக்களையும் கேட்டு அறிந்தார். அப்போது சந்திர பாபுநாயுடுவிடம் ஒரு மாணவி பரபரப்பு குற்றச் சாட்டை கூறினார்.

    லஞ்சம் காரணமாக எங்களால் உயர் படிப்பு படிக்க முடியவில்லை. எல்லா இடங்களிலும் லஞ்சம் உள்ளது. எல்லா வி‌ஷயங்களுக்கும் அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள்.

    இங்குள்ள அதிகாரிகளில் கூட லஞ்சம் வாங்குபவர்கள் இருக்கிறார்கள். அதை தடுக்க வேண்டும் என்று கூறினார். முதல்வரிடம் மாணவி நேரடியாகவே லஞ்ச புகார் கூறியதால் பள்ளி விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

    அந்த மாணவிக்கு பதில் அளித்த சந்திரபாபுநாயுடு, தற்போது தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதன் மூலம் லஞ்சத்தை முற்றிலும் ஒழித்து விடலாம் என்றார்.

    Next Story
    ×