search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2018-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு?
    X

    2018-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு?

    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு முறையை கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
    புதுடெல்லி:

    மாநில கல்வி வாரியத்தை போல மத்திய அரசு வாரியத்தின் கீழ் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. ஆனால் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக இந்த பொதுத்தேர்வு முறை கடந்த 2010-ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது.

    பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாலும், அரசின் ஆல்-பாஸ் திட்டத்தாலும் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் இருந்து புகார் வந்தது. எனவே இந்த பொதுத்தேர்வு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

    இதைத்தொடர்ந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு முறையை கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டு முதல் இந்த பொதுத்தேர்வு முறை மீண்டும் கொண்டு வரப்படும் என தெரிகிறது.

    இது தொடர்பாக 25-ந் தேதி மத்திய கல்வி ஆலோசனை வாரியம் கூடி விவாதிக்கிறது. மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

    10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதன் மூலம், மாணவர்கள் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சந்திப்பதில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர். 
    Next Story
    ×