search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு-காஷ்மீரில் இந்தியா-சீனா ராணுவம் முதன் முறையாக கூட்டுப்பயிற்சி
    X

    ஜம்மு-காஷ்மீரில் இந்தியா-சீனா ராணுவம் முதன் முறையாக கூட்டுப்பயிற்சி

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் முதன் முறையாக கூட்டுப் பயிற்சி மேற்கொண்டனர்.
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் முதன் முறையாக கூட்டுப் பயிற்சி மேற்கொண்டனர்.

    இந்தியா சீனா இடையே அணுசக்தி வினியோகஸ்தர்கள் குழு, தீவிரவாதி மசூத் அசார் உள்ளிட்ட விவகாரங்களில் முரண்பாடு நிலவி வரும் நிலையில் இந்த கூட்டுப் பயிற்சி நடைபெற்றுள்ளது.

    இதில் நிலநடுக்கம் உள்ளிட்ட காலங்களில் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இந்த பயிற்சியில் பிரிகேடியர் ஆர்.எஸ்.ராமன் தலைமையில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் சீனாவின் சர் கலோனல் பேன் ஜன் தலைமையில் வீரர்கள் பங்கேற்றனர்.

    இதனிடையே இந்தியா சீனா இடையே ஒத்துழைப்பு, அமைதி மற்றும் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக ஹேண்டு இன் ஹேண்டு கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஹேண்டு இன் ஹேண்டு பயிற்சி மகாராஷ்டிரா மாநிலம் ஆந்த் பகுதியில் வருகின்ற நவம்பர் 15 முதல் 27 வரை நடைபெற உள்ளது.
    Next Story
    ×