search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையை கடக்க வரும் பேயின் உருவம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
    X
    சாலையை கடக்க வரும் பேயின் உருவம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

    4 வாகனங்கள் மோதியும் எதுவும் ஆகாமல் சாலையை கடந்து சென்ற பேய் வீடியோ காட்சியால் பரபரப்பு

    4 வாகனங்கள் மோதியும் எதுவும் ஆகாமல் சாலையை கடந்து சென்ற பேய் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    பேய் இருக்கிறதா? இல்லையா? இதுவும் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற வி‌ஷயம் போன்றதுதான். இரண்டுக்குமே இதுவரை உறுதியான விடை காண முடியவில்லை.

    ஆனால், நம்மையும் மீறி சில சக்திகள் கடவுள் இருக்கிறார். அல்லது பேய் இருக்கிறது போன்றவற்றை நம்ப சொல்கிறது. இது போன்ற வி‌ஷயம் ஒன்று தற்போது டெல்லியில் நடந்துள்ளது. டெல்லியில் முக்கிய வீதி ஒன்றில் வைக்கப்பட்டுள்ள ஒரு வீடியோ கேமராவில் பேய் போன்ற உருவம் சாலையை கடந்து செல்லும் காட்சி பதிவாகி இருக்கிறது.

    அந்த கேமராவில் அதிகாலை 2.11 மணி என நேரம் காட்டுகிறது. அப்போது ஒரு வீட்டுக்குள் இருந்து கேட்டை தாண்டி கறுப்பு உருவம் ஒன்று சாலைக்கு வருகிறது. அந்த நேரத்தில் அந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

    முதலாவதாக அந்த கறுப்பு உருவத்தில் லாரி ஒன்று மோதுகிறது. ஆனாலும் அதற்கு எதுவுமே ஆகவில்லை. லாரி கடந்து சென்றதும் அந்த உருவம் தொடர்ந்து சாலையில் நடக்கிறது. அடுத்தடுத்து 2 கார்கள் மோதுகின்றன. அப்போதும் எதுவும் ஆகவில்லை.

    அதைத் தொடர்ந்து ஸ்கூட்டரில் 2 பேர் வருகிறார்கள். ஸ்கூட்டரும் அந்த உருவத்தின் மீது மோதுகிறது. ஆனாலும், தொடர்ந்து அதற்கு எதுவும் ஆகாமல் சாலையை கடக்கிறது. சாலையின் மறுமுனைக்கு அருகில் வரும் போது திடீரென அந்த உருவம் தானாக மறைந்து விடுகிறது.

    இந்த வீடியோ காட்சியை யாரோ இப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் உள்ள தேதி 15.8.2016-ல் எடுக்கப்பட்டதாக காட்டுகிறது.

    டெல்லியில் இந்த காட்சி எங்கு எடுக்கப்பட்டது. அந்த தெருவின் பெயர் என்ன? போன்ற எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

    உண்மையிலேயே இந்த காட்சி கேமராவில் பதிவானதா? இல்லை என்றால் கம்ப்யூட்டர் விவரம் தெரிந்த சிலருடைய தில்லாலங்கடி வேலையா? என்று தெரியவில்லை.
    Next Story
    ×