search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவாக பேசுவதா? சல்மான் கானுக்கு ராஜ்தாக்கரே கண்டனம்
    X

    பாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவாக பேசுவதா? சல்மான் கானுக்கு ராஜ்தாக்கரே கண்டனம்

    பாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவாக கருத்து கூறிய நடிகர் சல்மான்கானுக்கு ராஜ்தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்-நடிகைகள் பலர் மும்பையில் தங்கி இந்திப் படங்களிலும், டெலிவி‌ஷன் தொடர்களிலும் நடித்து வருகிறார்கள். உரியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். என்று மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே எச்சரிக்கை விடுத்தார்.

    தொடர்ந்து இந்திய திரைப் படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிப்பதற்கு. இந்திய திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கம் அதிரடியாக தடைவிதித்தது. இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் சுமூகமான சூழ்நிலை நிலவும் வரை இந்தத்தடை அமலில் இருக்கும் என்றும் அறிவித்தது.

    இது குறித்து நடிகர் சல்மான்கான் கருத்து தெரிவித்துள்ளார் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

    பாகிஸ்தான் நடிகர்கள் தீவிரவாதிகள் அல்ல. அவர்கள் நடிகர்கள். தீவிரவாதம் வேறு, கலை வேறு, இரண்டையும் ஒன்றாக கலக்கக் கூடாது. தீவிரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்து இருப்பது அவசியமானது தான்.

    அதே சமயம் இரு நாட்டுக்கும் இடையே அமைதி, நல்லிணக்கம், நிலவ வேண் டும் என்பதே எனது விருப் பம் ஆகும். அமைதி நிலவி னால் தான் சாமான்ய மக்கள் பிரச்சினையின்றி வாழ முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சல்மான்கானின் இந்த கருத்துக்கு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: -

    பாகிஸ்தானில் இருந்து கலைஞர்களை வரவழைக்கும் அளவுக்கு இந்தியாவில் திறமைக்கு பஞ்சம் நிலவுகிறதா? சல்மான்கானை போன்ற நடிகர்கள் தங்களது படம் பாகிஸ்தானில் நல்ல முறையில் ஓட வேண்டும் என்று கவலைப்படுகிறார்கள். நமது ராணுவ வீரர்கள் மீது பாய்ந்த குண்டுகள் உண்மையானவை. அது ஒன்றும் சினிமா காட்சி அல்ல.

    இவ்வாறு ராஜ்தாக்கரே தெரிவித்தார்.
    Next Story
    ×