search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல: திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் பேட்டி
    X

    பாகிஸ்தான் மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல: திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் பேட்டி

    பாகிஸ்தான் மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியா - பாகிஸ்தான் சர்வேதேச கட்டுப்பாட்டு பகுதிக்கு அப்பால் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நிகழ்த்தியதையடுத்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இதனையடுத்து, இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய திரைப்படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது. இந்த தீர்மானம் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    மேலும் இந்தியா, பாகிஸ்தான் இடையே இயல்பு நிலை திரும்பும் வரை பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க தடை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பெனகல் கூறியதாவது:-

    பாகிஸ்தான் மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. அதேபோல் பாகிஸ்தான் மக்களும் இந்தியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இது அரசுகளுக்கு இடையிலான பிரச்சனை.

    சில பணிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதால் கலைஞர்கள் இங்கு வந்துள்ளார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது? பாகிஸ்தான் அரசு தனிப்பட்ட நபர்கள் உடன் செய்வதற்கு ஒன்றும் இல்லை.

    இவ்வாறு தெரிவித்தார்.

    இதனிடையே பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது குறித்து இந்தி நடிகர் சல்மான் கான் கூறுகையில், “பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்ல. அவர்கள் கலைஞர்கள் தான். அனுமதி வழங்குவதும், விசா கொடுப்பதும் அரசாங்கத்தின் பணி ஆகும். இரு நாடுகளிடையே அமைதியை நிலைநாட்ட வேண்டியது முக்கியமான விஷயம்” என்றார்.

    முன்னதாக, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பை சேர்ந்த அமே கோப்பர், “பாகிஸ்தான் கலைஞர்கள் பணிபுரிவதை கண்டால் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம். இந்தியாவில் பாகிஸ்தான் கலைஞர்களுடன் யாரேனும் பணி செய்தால் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்” என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×