search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் மீண்டும் அத்துமீறல்: 1 மணி நேரம் துப்பாக்கியால் சுட்டது
    X

    காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் மீண்டும் அத்துமீறல்: 1 மணி நேரம் துப்பாக்கியால் சுட்டது

    காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டு துப்பாக்கி சூடு நடத்தியது. துப்பாக்கி சூடு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.
    ஜம்மு:

    காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதுடன் பாகிஸ்தான் படைகளும் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    உரி தீவிரவாத தாக்குதலுக்கு பின்பு 3 முறை பாகிஸ்தான் படைகள் அத்துமீறலில் ஈடுபட்டது. நேற்று முன்தினம் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளின் முகாம்களை அழித்த அதே நேரத்தில் காஷ்மீர் எல்லையில் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கி சூடு நடத்தியது.

    தொடர்ந்து காஷ்மீரில் இன்றும் பாகிஸ்தான் படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறலில் ஈடுபட்டது. ஜம்முவில் சப்ரியால்-சம்னம் பகுதியில் பல்லன்வாலா என்ற இடத்தில் சர்வதேச எல்லையில் நள்ளிரவு 12.30 மணிக்கு பாகிஸ்தான் படைகள் துப்பாக்கியால் சுட்டது.

    தொடர்ந்து அதிகாலை 1.30 மணி வரை இடைவிடாமல் துப்பாக்கியால் சுட்டவாறு இருந்தது. இதில் இந்திய தரப்பில் எந்த சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.

    இந்த தகவலை ஜம்மு பிராந்திய துணை கமி‌ஷனர் சிம்ரந்தீப்சிங் தெரிவித்தார். இந்த தாக்குதலில் சிறிய ரக ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும், இதில் சேதம் எதுவும் இல்லை. இது கடந்த 36 மணி நேரத்தில் 3-வது அத்துமீறல், செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5-வது அத்துமீறல் என்றும் அவர் கூறினார்.
    Next Story
    ×