search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் இந்திய திரைப்படங்களில் நடிக்க தடை
    X

    பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் இந்திய திரைப்படங்களில் நடிக்க தடை

    பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் இந்திய திரைப்படங்களில் நடிக்க இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் இந்திய திரைப்படங்களில் நடிக்க இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

    அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது:

    பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடிகர் நடிகைகள் இந்திய திரைப்படங்களில் நடிக்கவோ பணியாற்றவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா பாகிஸ்தான் இடையே இயல்பு நிலை திரும்பும் வரை பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் இந்திய திரைப்படங்களில் நடிக்க தடை நீடிக்கும். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர்களும் இந்திய படங்களுக்கான வேலைகளில் ஈடுபட முடியாது என இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மராட்டிய நவ்நிர்மாண் சேனா அமைப்பினர் எதிரிப்பு தெரிவித்திருந்தது நினைவுகூறத்தகக்து.
    Next Story
    ×