search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திக்விஜய் சிங் அவதூறு வழக்கு: மத்திய மந்திரி உமா பாரதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது போபால் நீதிமன்றம்
    X

    திக்விஜய் சிங் அவதூறு வழக்கு: மத்திய மந்திரி உமா பாரதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது போபால் நீதிமன்றம்

    காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக்விஜய் சிங் தொடர்ந்த அவதூறு வழக்கில், மத்திய மந்திரி உமா பாரதிக்கு எதிராக போபால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
    போபால்:

    கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ரூ. 15,000 கோடி அளவுக்கு காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஊழலில் ஈடுபட்டதாக மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி குற்றம் சாட்டினார்.

    இது தொடர்பாக உமாபாரதி மீது திக்விஜய் சிங் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை மத்திய பிரதேச மாநில போபால் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், திக்விஜய் சிங் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் போபால் நீதிமன்றம் உமா பாரதிக்கு  எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக, நீதிமன்றத்தில் உமாபாரதி என்னிடம் மன்னிப்பு கேட்டால் அவர் மீது நான் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை வாபஸ் பெற்று விடுவேன் என்று திக்விஜய் சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×