search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் எல்லையில் உள்ள கிராம மக்களை வெளியேற்றி ராணுவத்தினர் குவிப்பு
    X

    பஞ்சாப் எல்லையில் உள்ள கிராம மக்களை வெளியேற்றி ராணுவத்தினர் குவிப்பு

    பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் மாநில பகுதியில், பாதுகாப்பிற்காக கிராம மக்களை வெளியேற்றி ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    சர்வதேச எல்லையையொட்டி பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய வீரர்கள் நள்ளிரவில் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். அதிகாலை 12.30 மணி முதல் 4.30 மணி வரை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    சுமார் 500 மீட்டர் முதல் 2 கிலோ மீட்டர் வரை சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி இந்திய ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் தரைப்படை மற்றும் ஹெலிகாப்டர் மூலமாக நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகளின் 7 முகாம்களை ராணுவத்தினர் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்திய ராணுவத்தினரின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.



    இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் மாநில பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்காக சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாப் மாநில கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×