search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், பல்கலைக்கழங்களில் இலவச வைபை வழங்கும் கூகுள்
    X

    வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், பல்கலைக்கழங்களில் இலவச வைபை வழங்கும் கூகுள்

    ‘கூகுள் ஸ்டேஷன்’ என்ற கட்டமைப்பு மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச வைபை அளிக்க கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது.
    புதுடெல்லி:

    உலகின் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் இணையதளமான கூகுள் இன்று தனது 18-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதனையொட்டி ‘கூகுள் ஸ்டேஷன்’ என்ற கட்டமைப்பு மூலம் இந்தியா முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச வைபை வசதியை அளிக்க முன்வந்துள்ளது.

    இந்திய மக்கள் இன்றுமுதல் பொது இடங்களில் இந்த இலவச வைபை வசதியைப் பெற முடியும். குறிப்பாக வணிக வளாகங்கள், பல்கலைக்கழகங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவற்றில் இந்த வசதியைப் பெற முடியும்.

    கூகுள் நிறுவனம் மத்திய ரெயில்வேயின் 'ரெயில்டெல்' நிறுவனத்துடன் இணைந்து ஏற்கனவே நாடுமுழுவதும் 53 ரெயில் நிலையங்களில், இலவச 'வைபை' வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×