search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உரி தாக்குதல்: இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்த தேசிய புலனாய்வு நிறுவனம்
    X

    உரி தாக்குதல்: இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்த தேசிய புலனாய்வு நிறுவனம்

    உரி தாக்குதலின்போது இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இருவரை தேசிய புலனாய்வு நிறுவனம் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
    புது டெல்லி:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ தலைமையகம் மீது கடந்த 18-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். பதிலுக்கு இந்த தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

    உரி தாக்குதலைத் தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுடன் இந்திய ராணுவம் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற இருவரை கைது செய்தனர்.

    இந்நிலையில் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இருவரையும் தேசிய புலனாய்வு நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணையைத் துவக்கியுள்ளது. உரி தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு உதவியதாக கைதான இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. விரைவில் இருவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க தேசிய புலனாய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
    Next Story
    ×