search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்: சித்தராமையா
    X

    உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்: சித்தராமையா

    உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அனைத்து கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
    பெங்களூர்:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசின் தீர்மானங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை கட்டுப்படுத்தாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும், தமிழகத்திற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநிலம் மண்டியாவில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் நகல் இதுவரை பெறப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அனைத்து கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×