search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரக்கு ரெயில் தடம்புரண்டதால் 8 ரெயில்கள் ரத்து
    X

    சரக்கு ரெயில் தடம்புரண்டதால் 8 ரெயில்கள் ரத்து

    உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று சரக்கு ரெயில் ஒன்று தடம்புரண்டதையடுத்து அந்த பாதையில் செல்லக்கூடிய 8 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
    கான்பூர்:

    உத்தர பிரதேச மாநிலம் பர்கான்-மித்வாலி ரெயில் நிலையங்களுக்கு மத்தியில் சரக்கு ரெயில் இன்று காலை 6.28 மணியளவில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 5 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி மண்ணில் புதைந்ததால் காசியாபாத்-துண்ட்லா பிரிவில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரெயில் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    மீட்பு பணிகள் தாமதம் ஆனதால் அந்த பாதையில் செல்லக்கூடிய 8 பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டது. சீத்தாபூர் சிட்டி-கான்பூர் பயணிகள் ரெயில் பாலமாவ் ரெயில் நிலையம் வரை இயக்கப்பட்டது.

    கவுகாத்தி - டெல்லி ராஜ்தானி, ஹவுரா -டெல்லி ராஜ்தானி, புவனேஸ்வர்-டெல்லி ராஜ்தானி, சீல்டா -டெல்லி ராஜ்தானி மற்றும் கான்பூர்- டெல்லி சகாப்தி உள்ளிட்ட 7 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதையடுத்து இந்த ரெயில்கள் துண்ட்லா-ஆக்ரா-பல்வால் சந்திப்புகள் வழியாக சென்றன. இதேபோல் மறுமார்க்கத்திலும் 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

    விபத்து பற்றி தகவல் அறிந்த ரெயில்வே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து வழித்தடத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×