search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேச மாநிலத்தில் புதிய மந்திரிகளாக 4 பேர் பதவி ஏற்பு
    X

    உத்தரபிரதேச மாநிலத்தில் புதிய மந்திரிகளாக 4 பேர் பதவி ஏற்பு

    உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் அரசின் மந்திரிசபை நேற்று 8-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 4 பேர் புதிய கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் அரசின் மந்திரிசபை நேற்று 8-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் காயத்ரி பிரசாத் பிரஜாபதி, சிவ்காந்த் ஓஜா, மனோஜ்குமார் பாண்டே, ஜியாவுதீன் ரிஸ்வி ஆகிய 4 பேர் புதிய கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்றனர். மேலும் 6 மந்திரிகள் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டனர். அவர்களுக்கு கவர்னர் ராம்நாயக் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    அந்த மாநில சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் இதுதான் மந்திரிசபையின் கடைசி மாற்றமாக இருக்கும் என தெரிகிறது.

    புதிய மந்திரிகளில் காயத்ரி பிரசாத் 4-வது முறையாக பதவி ஏற்றுள்ளார். கடந்த 12-ந் தேதி தான் அவர் நீக்கப்பட்டார். இப்போது அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், அவரது தம்பி சிவ்பால்சிங் யாதவ், முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×