search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருணாசலபிரதேச மாநிலத்திற்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது
    X

    அருணாசலபிரதேச மாநிலத்திற்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது

    அருணாசலபிரதேசத்தின் கிழக்கு பகுதிக்குள் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்து பின்னர் திரும்பிச் சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    அருணாசலபிரதேச மாநிலத்திற்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது.

    வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசத்தின் சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் அங்குள்ள இந்திய எல்லைப்பகுதிக்குள் அந்நாட்டு ராணுவம் அவ்வப்போது அத்துமீறி நுழைந்து சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதனால் அங்கு இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது.

    இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகளும் இதுவரை 19 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் சுமுக தீர்வு காணப்படவில்லை.

    இந்த நிலையில் தற்போது அருணாசலபிரதேசத்தின் கிழக்கு பகுதிக்குள் 45 கி.மீ. தூரம் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்தது தெரியவந்துள்ளது. கடந்த 9-ந் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

    ஹதிக்ரா கணவாய் பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ படையினர், பின்னர் திரும்பிச் சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆனால் இதனை சீன ராணுவம் மறுத்து உள்ளது.

    இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜிங் ஷூயாங் கூறுகையில், ‘இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லை பிரச்சினையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை என்பது வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். எனவே சீன ராணுவம் அத்துமீறி நுழையவில்லை. இரு நாட்டு எல்லை பாதுகாப்பு பணியில் இந்தியா எங்களுடன் இணைந்து செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எல்லை பிரச்சினை குறித்து வரும் காலங்களில் சுமுக தீர்வு எட்டப்படும்’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×