search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோயை குணப்படுத்த சூடு போட்ட போலி டாக்டர்கள்: 2 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதி
    X

    நோயை குணப்படுத்த சூடு போட்ட போலி டாக்டர்கள்: 2 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதி

    நோயை குணப்படுத்துவதாகக் கூறி பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடு போட்டதால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு நிமோனியா காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை எம்.ஜி. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது சிறுமியின் உடலில் தீக்காயம் இருந்தது. இதுபற்றி டாக்டர்கள் விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல் வெளியானது.

    சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதும் போலி டாக்டர் ஒருவரிடம் கொண்டு சென்றுள்ளனர். பாரம்பரிய சிகிச்சை என்ற பெயரில் அந்த நபர், சிறுமியின் உடலில் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியால் சூடு போட்டுள்ளார். குணமடையாமல் போகவே வேறு வழியின்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

    இதேபோல் அனிமியா நோய் தாக்கிய 2 வயது குழந்தைக்கும் ஒரு போலி டாக்டர், சூடு போட்டு வைத்தியம் பார்த்துள்ளார். அந்த குழந்தையும் இதே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இத்தகவலை மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த இரு நோயாளிகள் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
    Next Story
    ×