search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமிதாப் பச்சன், சச்சினின் தூய்மை இந்தியா திட்ட பிரச்சார வீடியோ வெளியீடு
    X

    அமிதாப் பச்சன், சச்சினின் தூய்மை இந்தியா திட்ட பிரச்சார வீடியோ வெளியீடு

    தூய்மை இந்தியா திட்டத்தை மக்களிடம் பிரபலப்படுத்தும் விதமாக அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பிரச்சார வீடியோ இன்று வெளியிடப்பட்டது.
    புதுடெல்லி:

    மத்திய அரசின், 'தூய்மை இந்தியா' திட்டத்தை மக்களிடம் பிரபலப்படுத்தும் விதமாக, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், அனில் அம்பானி உள்ளிட்ட பல்துறை சார்ந்த, 27 பேர் தூதர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கழிவறையை பயன்படுத்துவது தொடர்பாக அமிதாப் பச்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் தூய்மை இந்தியா திட்ட பிரச்சார வீடியோ இன்று வெளியிடப்பட்டது.

    மத்திய குடிநீர் மற்றும் சுகாதார துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் இந்த வீடியோவை இன்று வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் தோமர் பேசியதாவது:-



    தூய்மை இந்தியா திட்ட விளம்பர தூதர்களான அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர் இருவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

    தூய்மை இந்தியா திட்டத்தில் அவர்கள் மிகவும் உறுதியாக உள்ளனர். அவர்கள் மிகவும் அதிகமான பணிச் சூழல் நிலவும் போதும், எப்பொழுது உதவி கேட்டாலும் தயாராகவே உள்ளனர்.

    கழிவறையை பயன்படுத்துவது குறித்தும், கழிவறை கட்டுவது குறித்தும் அதிகாரிகள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்கள். வீடியோவில் தூய்மை திட்டத்தில் மேலும் பலரை சேருமாறு வலியுறுத்தியுள்ளார்கள்.

    இவ்வாறு பேசினார்.

    நிகழ்ச்சியில் பேசிய சச்சின் டெண்டுல்கர், நாடு முழுவதும் கழிவறைகளை கட்டுவதற்கு தன்னுடன் இந்த திட்டத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.
    Next Story
    ×