search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உரி ராணுவ முகாமை தாக்கிய குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: பிரதமர் மோடி எச்சரிக்கை
    X

    உரி ராணுவ முகாமை தாக்கிய குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: பிரதமர் மோடி எச்சரிக்கை

    உரி ராணுவ முகாமை தாக்கிய குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என ரேடியோவில் உரையாற்றும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி மாதந் தோறும் ரேடியோவில் உரையாற்றும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உரி ராணுவமுகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு எனது மரியாதையை உரித்தாக்குகிறேன், அஞ்சலி செலுத்துகிறேன். முகாம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

    நமது ராணுவம் மீது நம்பிக்கை உள்ளது. அவர்கள் மீது நமக்கு பற்றார்வம் உள்ளது. நமது வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். குடிமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைவரும் எதைப்பற்றியாவது பேசிக் கொண்டிருக்கிறோம்.

    ஆனால் ராணுவ வீரர்கள் பேசுவதில்லை. அவர்கள் தங்கள் வீரம் மற்றும் தைரியம் வாயிலாக அதை வெளிப்படுத்துகிறார்கள்.

    இன்று நான் காஷ்மீர் மக்களுக்காக பேச விரும்புகிறேன். அவர்கள் நமது தேசத்துக்கு எதிரானவர்களை அடையாளம் காண தொடங்கி விட்டனர். தங்களின் வாழ்க்கையை மீண்டும் வாழ விரும்புகின்றனர். இயல்பான நிலை ஏற்பட்டு வர்த்தகங்கள் மற்றும் கல்வி தொடர வேண்டும் என நினைக்கின்றனர்.

    காஷ்மீர் மக்களை பாதுகாப்பது அரசின் கடமையாகும். அதற்கான நடவடிக்கைகளை அரசு நிர்வாகம் மேற் கொண்டுள்ளது. பலர் எனது கோவிந்தா மற்றும் நரேந்திர மோடி ஆப்ஸ்-க்கு பாராலிம்பிக் பற்றி கருத்து அனுப்பி உள்ளனர். அதில் பாராலிம்பிக் பற்றி பிரதமர் பேச வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    பாராலிம்பிக்கில் நமது வீரர்கள் சிறப்பான செயல்திறன் மூலம் 4 பதக்கங்களை பெற்று சிறப்பு சேர்த்துள்ளனர். உலக அரங்கில் நம்மை பெருமைப்பட செய்துள்ளனர். இது மாற்று திறனாளிகள் மீதான மக்களின் கவனம் திரும்ப வழிவகுத்துள்ளது.

    கடந்த வாரம் நான் குஜராத் மாநிலம் நவ்சாரி பகுதியில் மாற்று திறனாளிகளுடன் இருந்தேன். அது பல அற்புதமான அனுபவங்களை அளித்தது. தூய்மை இந்தியா திட்டம் பல கோடி மக்களின் மனதில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 2.48 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு மேலும் 1.5 கோடி கழிவறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 1969 என்ற எண்ணை பயன்படுத்தி தூய்மை இந்தியா திட்டம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
    Next Story
    ×