search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: சித்தராமையா பேட்டி
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: சித்தராமையா பேட்டி

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்துவிட்டது. சட்டமன்றக் கூட்டத்தை கூட்டி தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது. தமிழக அரசு உரிய பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

    இந்நிலையில், காவிரி விவகாரம் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேச முடிவு செய்த சித்தராமையா இன்று டெல்லி சென்றார். அங்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கை சந்தித்த சித்தராமையா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி இறுதி முடிவு எடுக்கப்படும். இதுதொடர்பாக பிரதமரை சந்திக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. எனவே, மத்திய மந்திரி உமாபாரதியை சந்தித்து, காவிரி நீரை திறப்பதில் தற்போதுள்ள பிரச்சனைகளை அவரிடம் கூறியுள்ளேன்.

    காவிரி வழக்கு வரும் 27-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×