search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்
    X

    இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்

    ரூ.1.5 லட்சம் கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி மீண்டும் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டு உள்ளது. அதில் ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து ரூ.1.5 லட்சம் கோடி என்றும் அவர் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து ரூ.1.2 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 12 மாதங்களில் அவரது சொத்து 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

    சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ 4ஜி செல்போன் சேவையை தொடங்கியது. இது இந்தியாவில் தொலைதொடர்பு துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    2-வது இடத்தில் இந்தியாவின் மருந்து பொருட்கள் உற்பத்தி துறையில் சாதனை மன்னனான திலிப் சங்வி உள்ளார். இவரது சொத்து ரூ.1.1 லட்சம் கோடி.

    3-வது இடத்தில் இந்துஜா சகோதர்களும் (ரூ.1.01 லட்சம் கோடி), 4-வது இடத்தில் அசிம் பிரேம்ஜி (ரூ.1.0 லட்சம் கோடி).

    5-வது இடத்தில் பல்லோன்ஜி பிஸ்திரி (ரூ.93 ஆயிரம் கோடி), 6-வது இடத்தில் லட்சுமி மிட்டல் (ரூ.83.7 ஆயிரம் கோடி), 7-வது இடத்தில் கோத்ராஜ் குடும்பம் (ரூ.83.1 ஆயிரம் கோடி).

    8-வது இடத்தில் ஷிவ் நாடார் (ரூ.76 ஆயிரம் கோடி), 9-வது இடத்தில் குமார் பிர்லா (ரூ.58 ஆயிரம் கோடி), 10-வது இடத்தில் சைரஸ் பூனவாலா (ரூ.57 ஆயிரம் கோடி) ஆகியோர் உள்ளனர்.
    Next Story
    ×