search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நர்சுகள் அறிவித்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் திடீர் வாபஸ்
    X

    நர்சுகள் அறிவித்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் திடீர் வாபஸ்

    சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அகில இந்திய அரசு நர்சுகள் கூட்டமைப்பு மற்றும் டெல்லி நர்சுகள் கூட்டமைப்பு நடத்திவந்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அகில இந்திய அரசு நர்சுகள் கூட்டமைப்பு மற்றும் டெல்லி நர்சுகள் கூட்டமைப்பு நடத்திவந்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அகில இந்திய அரசு நர்சுகள் கூட்டமைப்பு மற்றும் டெல்லி நர்சுகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் நேற்று முன்தினம் முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

    தலைநகர் டெல்லியில் மத்திய மற்றும் மாநில அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் 20 ஆயிரம் நர்சுகள் கலந்து கொண்டனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளின் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். நர்சுகளின் வேலை நிறுத்தத்தால் ஆஸ்பத்திரிகளில் மகப்பேறு உள்ளிட்ட மருத்துவ சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு நடைபெறவேண்டிய அறுவை சிகிச்சைகளும் தள்ளி வைக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து இந்த வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என்பதை அறிவிக்கும் விதமாக அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டமான ‘எஸ்மா’வை கவர்னரின் ஒப்புதலுடன் டெல்லி அரசு நேற்று முன்தினம் பிறப்பித்தது.

    இதையடுத்து, டெல்லி அம்பேத்கர் ஆஸ்பத்திரியில் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட இரு ஆண் செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதாக நேற்று பின்னிரவு அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நர்சுகள் பிரச்சனை தொடர்பாக வரும் 12-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தொலைபேசி மூலம் உறுதியளித்ததை தொடர்ந்து நாடு தழுவிய வேலைநிறுத்தம் கைவிடப்படுவதாக அகில இந்திய அரசு நர்சுகள் சங்க செய்தி தொடர்பாளர் லிலாதர் ராம்சந்தானி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×