search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பு பண புழக்கத்தை தடுக்க ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான ரொக்க பரிவர்த்தனைக்கு தடை?
    X

    கருப்பு பண புழக்கத்தை தடுக்க ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான ரொக்க பரிவர்த்தனைக்கு தடை?

    கருப்பு பண புழக்கத்தை தடுக்க ரூ.3 லட்சத்துக்கும் அதிகமான ரொக்க பரிவர்த்தனைக்கு தடை செய்ய மத்திய நேரடி வரிகள் வாரியம் பரிசீலனை செய்து வருகிறது
    புதுடெல்லி:

    கருப்பு பண விவகாரம் தொடர்பான விசாரணைகளை சுப்ரீம் கோர்ட்டு நியமித்த சிறப்பு விசாரணைக் குழு மேற்கொண்டு வருகிறது. ஓய்வுபெற்ற முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான இந்த குழு கருப்பு பண புழக்கத்தை தடுப்பதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த தனது 5-வது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் அண்மையில் தாக்கல் செய்தது.

    அதில், வங்கிகளில் ரூ.3 லட்சத்துக்கு அதிகமாக மேற்கொள்ளப்படும் ரொக்க பணபரிவர்த்தனைகளை முற்றிலுமாக தடை செய்வது, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் ரொக்க கையிருப்பாக ரூ.15 லட்சத்தை மட்டும் வைத்துக் கொள்ள அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டு இருந்தன. இதற்காக தனிச்சட்டத்தை இயற்றி அதை மீறுவோரை தண்டிக்கவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதுபற்றி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ராணி சிங் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,

    “சிறப்பு விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் எங்களுக்கு வந்துள்ளன. இவை பரிசீலனையில் இருக்கிறது. ஏற்கனவே அதிகதொகை பரிவர்த்தனையின்போது மூலவரியாக 1 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. தவிர பான் நம்பரை குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
    Next Story
    ×