search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லையில் கம்பிவேலி அமைக்கும் பணியை மார்ச் மாதத்திற்குள் முடிக்க மத்திய அரசு உத்தரவு
    X

    எல்லையில் கம்பிவேலி அமைக்கும் பணியை மார்ச் மாதத்திற்குள் முடிக்க மத்திய அரசு உத்தரவு

    திரிபுராவில் மார்ச் மாதத்திற்குள் எல்லைப்பகுதியில் கம்பி வேலி அமைக்கும் பணியை முடிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியா-வங்காளதேசத்துக்கு இடையிலான 4,096 கி.மீ. நீளமுள்ள எல்லைப்பகுதியில் திரிபுராவில் மட்டும் 856 கி.மீ. தூரம் உள்ளது. இந்த எல்லைப் பகுதி வழியாக ஊடுருவல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. இது, அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது. எனவே, வங்காளதேசத்துடனான எல்லைப்பகுதியில் கம்பி வேலி அமைக்க அரசு முடிவு செய்து பணிகளை தொடங்கி உள்ளது.

    இந்நிலையில், திரிபுராவில் உள்ள இந்தியா-வங்காளதேச எல்லைப்பகுதியில் கம்பி வேலி அமைக்கும் பணியை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் எல்லை மேலாண்மை செயலாளர் சுஷீல் குமார், இந்த உத்தரவை வேலி அமைக்கும் பணியை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு பிறப்பித்துள்ளார்.

    அசாமில் உள்ள எல்லைப்பகுதியில் கம்பிவேலி அமைக்கும் பணியை ஜூன் 2017க்குள் முடிக்கும்படி உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உத்தரவிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, செயலாளரின் இந்த உத்தரவு வெளியாகி உள்ளது.
    Next Story
    ×