search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான விபத்துகளில் ரூ.2300 கோடி ரூபாய் இழப்பை சந்தித்த இந்திய விமானப்படை
    X

    விமான விபத்துகளில் ரூ.2300 கோடி ரூபாய் இழப்பை சந்தித்த இந்திய விமானப்படை

    இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் கடந்த எட்டாண்டுகளில் சந்தித்த விபத்துகளின் மூலம் மட்டும் நாட்டுக்கு 2300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் கடந்த எட்டாண்டுகளில் சந்தித்த விபத்துகளின் மூலம் மட்டும் நாட்டுக்கு 2300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் மற்றும் பயிற்சி விமானங்கள் அவ்வப்போது விபத்துகளில் சிக்கி விழுந்து நொறுங்குவது வாடிக்கையாகி விட்டது.

    இவ்வகையில், கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை நடந்த 86 விபத்துகளில் 70 போர் விமானங்களை நாடு இழந்துள்ளது. இதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுமார் 2300 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுள்ளது.

    இவற்றில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த விபத்தில் விலையுயர்ந்த C-130 J ரக விமானத்தை நாம் இழந்துள்ளோம். இந்த ஒரு போர் விமானத்தின் விலை மட்டும் 374 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×