search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரத மாதாவுக்கு ஜே என்று கோஷமிட மக்கள் உயிரோடு இருப்பது அவசியம்: சிவசேனா
    X

    பாரத மாதாவுக்கு ஜே என்று கோஷமிட மக்கள் உயிரோடு இருப்பது அவசியம்: சிவசேனா

    பாரத மாதாவுக்கு ஜே என்று கோஷமிட மக்கள் உயிரோடு இருப்பது அவசியம் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் முன்னெப்போதும் இல்லாத வறட்சியை எதிர்கொண்டுள்ளது. பல்வேறு அணைகளிலும், நீர்நிலைகளிலும் தண்ணீர் குறைந்து விட்டதால் பல இடங்களில் மக்கள் குடிநீருக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது.

    இது தொடர்பாக சிவசேனா கட்சிப் பத்திரிகையான "சாம்னாவில்' எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

    "பாரத மாதாவுக்கு ஜே' என்று கோஷமிடாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் பேசியுள்ளார். மாநிலத்தில் இப்போது கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றன. எனவே, "பாரத மாதாவுக்கு ஜே என்று மக்கள் கோஷமிட முதலில் மக்கள் உயிரோடு இருக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை முதல்வர் முதலில் எடுக்க வேண்டும்.

    மக்களுக்கு போதிய தண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தர முடியவில்லையென்றால், முதல்வர் பதவியில் இருந்து பட்னவீஸ் விலகிவிடலாம்.

    மக்கள் நிம்மதியாக இருந்தால்தான் பாரத மாதாவும் மகிழ்ச்சியாக இருப்பார். எனவே மக்களுக்கு முதலில் தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும். முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ளவர்தான் இதில் முழுப் பொறுப்பையும் ஏற்றுச் செயல்பட வேண்டும்.

    முன்பு அநீதிக்கு எதிராக கொதித்தெழுந்து இளைஞர்கள் நக்ஸல் இயக்கத்தில் இணைந்து ஆயுதங்களை ஏந்தினர். இப்போது மகாராஷ்டிர இளைஞர்கள் தண்ணீர் கிடைக்காமல் கோபமடைந்தும் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று தலையங்கத்தில் அந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
    Next Story
    ×