iFLICKS தொடர்புக்கு: 8754422764

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு ‘குக்கர்’ சப்ளையா?: பறக்கும் படை கண்காணிப்பு

ஆர்.கே.நகரில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ரசீது இன்றி கொண்டு வரப்பட்ட 500 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து குக்கர்கள் சப்ளை செய்யப்படுகிறதா? என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.

டிசம்பர் 12, 2017 13:38

மனைவி - குழந்தைகளை கஷ்டப்படுத்தி விட்டேன் - ஜவுளி வியாபாரி உருக்கமான கடிதம்

தாய், மனைவி, மகன், மகளை கொன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஜவுளி வியாபாரி தாமோதரன் விபரீத முடிவு எடுக்கும் முன் வீட்டில் தன் கைப்பட 5 பக்க கடிதம் எழுதி வைத்து இருந்தார். அதை போலீசார் கைப்பற்றினர்.

டிசம்பர் 12, 2017 13:31

விளையாட்டு, போலீஸ் துறையில் ‘சுனாமி’ மாணவிகள் சாதனை - தலைமை ஆசிரியரால் மறுவாழ்வு

கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி பெற்றோரை இழந்த 33 மாணவிகளை தத்தெடுத்த தலைமை ஆசிரியர், அவர்களை விளையாட்டு மற்றும் போலீஸ் துறையில் சிறந்தவர்களாக உருவாக்கி இருக்கிறார்.

டிசம்பர் 12, 2017 13:14

மோசடி வழக்கு: முன்ஜாமீன் கேட்டு செந்தில்பாலாஜி மனு

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

டிசம்பர் 12, 2017 13:02

ஆர்.கே.நகரில் ரூ.9800 பணத்துடன் அ.தி.மு.க. பிரமுகர் சிக்கினார்

ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.9,800 பணத்துடன் நின்றிருந்த அ.தி.மு.க. பிரமுகரை பறக்கும் படையினர் மடக்கி பிடித்தனர்.

டிசம்பர் 12, 2017 12:36

பொதுமக்கள் சரத்குமாருடன் தொடர்பு கொள்ள செல்போன் ‘செயலி’ வெளியீடு

நடிகர் சரத்குமார் செல்போன் மூலம் அனைத்து தரப்பு மக்களுடனும் நேரடியாக தொடர்பு கொள்ளவும், கருத்துக்களை பறிமாறவும் செல்போன் செயலி(ஆப்) ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

டிசம்பர் 12, 2017 12:24

ஆர்.கே.நகரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 3-வது நாளாக பிரசாரம்

ஆர்.கே.நகரில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 3-வது நாளாக பிரசாரம் செய்கிறார்.

டிசம்பர் 12, 2017 12:14

மத்திய, மாநில அரசுகளே மீனவர்களை கொன்று விட்டன: அன்புமணி ராமதாஸ்

மீட்புப் பணியை சரியாக மேற்கொள்ளாமல் மீனவர்களை மத்திய, மாநில அரசுகளே கொன்று விட்டன என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

டிசம்பர் 12, 2017 12:10

நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது

3-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் இரண்டு நாள் நடத்தும் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

டிசம்பர் 12, 2017 11:54

குக்கருக்கு அமோக வரவேற்பு: இரட்டை இலை செத்து விட்டது- தினகரன்

துரோகிகளின் கைகளில் சிக்கிய இரட்டை இலை செத்துவிட்டது. எங்களது வெற்றியின் மூலம்தான் மீண்டும் உயிர் கொடுக்க முடியும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

டிசம்பர் 12, 2017 11:41

ஜெயலலிதா மரணம்: ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜராக விசாரணை கமி‌ஷன் உத்தரவு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வருகிற 20-ந்தேதி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.

டிசம்பர் 12, 2017 11:14

மீனவர்களை மீட்க கோரி சென்னையில், நாளை காங். ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னையில் நாளை காங்கிரஸ் போராட்டம் நடத்தப் போவதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 12, 2017 11:03

ஆர்.கே.நகர் தொகுதியில் எடப்பாடி-ஓ.பி.எஸ். அணிக்கு டெபாசிட் கிடைக்காது: மு.க.ஸ்டாலின்

ஆர்.கே.நகர் தொகுதியில் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். அணிக்கு டெபாசிட் கிடைக்காது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

டிசம்பர் 12, 2017 10:57

மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மீன் விலை இரண்டு மடங்கு உயர்வு

மீனவர்களின் போராட்டம் காரணமாக பெரும்பாலானவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பதால் மீன் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ஒரு வாரமாக நீடித்து வரும் இந்த பிரச்சனையால் மீன் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

டிசம்பர் 12, 2017 10:13

சென்னை பம்மலில் தாய், மனைவி- 2 குழந்தைகள் கொலை: ஜவுளி வியாபாரி தற்கொலை முயற்சி

சென்னை பம்மலில் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தாய், மனைவி- 2 குழந்தைகளை கொலை செய்து, வியாபாரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிசம்பர் 12, 2017 10:29

சென்னை, எர்ணாகுளம் இடையே சுவிதா சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கூட்ட நெரிசலை தவிர்க்கும் சென்னை, எர்ணாகுளம் இடையே சுவிதா சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 12, 2017 09:24

கடும் பனிப்பொழிவு: சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்ததால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்புள்ளாகியுள்ளது.

டிசம்பர் 12, 2017 09:17

சேலம் மாணவி வளர்மதிக்கு ஐகோர்ட்டு நீதிபதி அறிவுரை

படிக்கின்ற காலத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று சேலம் மாணவி வளர்மதிக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுரை வழங்கினார்.

டிசம்பர் 12, 2017 09:07

ஒக்கி புயலால் மாயமான மீனவர்களை கப்பல்கள் மூலம் தேடும் பணி தீவிரம்: கடலோர காவல்படை தகவல்

ஒக்கி புயலால் மாயமான மீனவர்களை கப்பல்கள் மூலம் தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வருவதாக இந்திய கடலோர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.

டிசம்பர் 12, 2017 08:58

குமரிஅனந்தன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி

தலைசுற்றல் காரணமாக காந்தி பேரவை தலைவர் குமரிஅனந்தன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் 12, 2017 08:45

ஆபாச படங்கள் வெளியீடு: கமிஷனர் அலுவலகத்தில் ஜெ.தீபா புகார் மனு

சமூக வலைத் தளங்களில் தனது புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ளதாக எம்.ஜி.ஆர்-அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா கமிஷனர் அலுவலகத்தில்புகார் மனு அளித்தார்.

டிசம்பர் 12, 2017 08:38

5

ஆசிரியரின் தேர்வுகள்...