iFLICKS தொடர்புக்கு: 8754422764

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகத்தின் நிழல் படிந்திருக்கிறது என்றும், ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

செப்டம்பர் 25, 2017 09:08

கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை பாதுகாப்போம்: அமைச்சர் கே.பாண்டியராஜன்

கீழடியில் விரைவில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து கூட்டாக அகழாய்வு மேற்கொள்ள உள்ளோம், என்றும் கீழடியில் கிடைத்த பொருட்களை பாதுகாப்போம், என்றும் அமைச்சர் கே.பாண்டியராஜன் உறுதிபட தெரிவித்தார்.

செப்டம்பர் 25, 2017 08:55

எடையை குறைக்க சிகிச்சை பெற்ற பெண் இறந்த விவகாரம்: 4 டாக்டர்கள் கொண்ட நிபுணர்கள் குழு அமைப்பு

எடையை குறைக்க சிகிச்சை பெற்ற பெண் இறந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு 4 டாக்டர்கள் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 25, 2017 08:46

பெரியார் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் மோசடி குறித்து சிபிஐ விசாரணை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

செப்டம்பர் 25, 2017 08:28

வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

செப்டம்பர் 25, 2017 05:26

இரட்டை இலை எனக்கே கிடைக்கும்: தீபா சொல்கிறார்

அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களும் என் பக்கம் உள்ளார்கள். இரட்டை இலை சின்னம் எனக்கே கிடைக்கும் என்று தீபா கூறினார்.

செப்டம்பர் 24, 2017 16:05

பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் கிரிக்கெட் வெற்றி கோப்பை சமர்ப்பிப்பு

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் 82-வது பிறந்த நாளை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வென்ற சாம்பியன் கோப்பை சமர்ப்பிக்கப்பட்டது.

செப்டம்பர் 24, 2017 15:45

நுங்கம்பாக்கத்தில் கள்ளக்காதலை தடுத்த காவலாளி கொலை: வேலைக்கார பெண்- ஆட்டோ டிரைவர் கைது

நுங்கம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் கள்ளக்காதலை தடுத்த காவலாளியை கொலை செய்த வழக்கில் வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

செப்டம்பர் 24, 2017 15:31

ஜெயலலிதா மரணம் பற்றி பேசி பயனில்லை: சீமான் பேட்டி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்தை கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா செத்தவுடன் உண்மையும் செத்துவிட்டது என்று சீமான் கூறினார்.

செப்டம்பர் 24, 2017 15:32

82-வது பிறந்தநாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர்தூவி மரியாதை

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 82-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி போயஸ் கார்டனில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

செப்டம்பர் 24, 2017 14:20

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு என வானிலை மையம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 24, 2017 13:38

ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

செப்டம்பர் 24, 2017 13:33

திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

ஜெயலலிதாவின் மரணத்துக்குத் துணை போன திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்து விசாரிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

செப்டம்பர் 24, 2017 13:10

முடிவுகள் எடுக்க ஓ.பி.எஸ்.க்கு அதிகாரம் இல்லை? - இரு அணிகளுக்கிடையே நீடிக்கும் பனிப்போர்

அ.தி.மு.க.வில் இரு அணிகளும் இணைந்த பின்னரும் முக்கிய முடிவுகள் எடுக்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 24, 2017 12:29

யோகாவுக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது: ஜி.கே.வாசன்

குழந்தைகள் நலன் கருதி யோகாவை கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

செப்டம்பர் 24, 2017 12:12

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள்: 5 பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்; 10 பெண்களுக்கு தையல் எந்திரம்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

செப்டம்பர் 24, 2017 12:53

ரெயில் முன்பதிவுக்கு எல்லா வங்கி ஏ.டி.எம். அட்டைகளையும் பயன்படுத்தலாம்: ஐ.ஆர்.சி.டி.சி.

ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கு எல்லா வங்கிகளின் ஏ.டி.எம். அட்டைகள், கிரெடிட் அட்டைகளை பயன்படுத்தலாம் என ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது.

செப்டம்பர் 24, 2017 11:34

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள்

அமைச்சருடன் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.

செப்டம்பர் 24, 2017 08:43

18 எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் இணையதளத்தில் இருந்து நீக்கம்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள், படங்கள் சட்டசபை இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 24, 2017 08:23

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதியை உடனடியாக நியமிக்க கோரி ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பிரமுகர் மனு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதியை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

செப்டம்பர் 24, 2017 08:15

5

ஆசிரியரின் தேர்வுகள்...