search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி பட்டமளிப்பு விழா
    X

    புதுக்கோட்டை செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி பட்டமளிப்பு விழா

    புதுக்கோட்டை லெணா விலக்கு செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியின் 8-ம் ஆண்டு பட்டயமளிப்பு விழா நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    விழாவிற்கு கல்லூரி தலைவர் வயிரவன் மற்றும் நிர்வாக இயக்குநர் செல்வராஜ் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் விழாவினை துவக்கி வைத்து பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்ப்பித்தார்.

    கல்லூரியின் முதன்மை செயல் இயக்குநர் பாண்டி கிருஷ்ணன், மனிதவள இயக்குநர் மீனா வயிரவன் மற்றும் கல்லூரி முதன்மைச் செயல் அலுவலர் கார்த்திக், செயலர் தியாகராஜன் ஆகியோர் பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்தினர்.

    விழாவில் முதன்மை விருந்தினராக திருச்சி முன்னாள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி கலந்து கொண்டு, கடந்த 2016-17 ஆம் ஆண்டில் அரசு வாரியத்தேர்வுகளை எதிர்கொண்டு சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தால் பட்டயம் பெற்ற 295 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பேருரையாற்றினார்.

    அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் படிப்பை முடித்து பட்டயம் பெறும் நிலையில் சரியான திட்டமிடல் இன்றி வாழ்க்கையை தொடங்கினால் வெற்றி பெற இயலாது போகும். ஒரு மனிதனை உயர்த்துவது அவனுடைய சிந்தனை. எனவே வெற்றிக்கு அடிப்படையான் எண்ணங்களை செம்மைப்படுத்தினால் விதியையும் மதியால் வெல்லலாம்.

    எனவே மனதை கட்டுப்படுத்தினால் வாழ்க்கையில் எளிதில் உயரலாம். ஒரு விவசாயி எப்படி பயிர்களில் களை எடுக்கின்றானோ அதைப்போல் கெட்ட எண்ணங்களை அகற்றி, யாருமே சாதிக்காத செயலை நீ சாதிக்க ஆசைப்பட வேண்டும்.லட்சியம் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாத கடிதம் போன்றது. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் கடுமையாக உழைத்தால் 5 ஆண்டுகளில் 10,000 மணி நேரத்தில் உயர்வாய்.

    வாழ்க்கையில் லட்சியத்தை அடைய நடந்து போகும் போது ஒரே பாதையில் செல். லட்சியத்தை மாற்றாதே. புதிய முயற்சியில் ஈடுபடும் போது உலகம் உன்னை தூற்றும், விடாமுயற்சி செய்தால் உலகம் உன்னை போற்றும். லட்சியத்தை குறிக்கோளாக வைத்துக்கொண்டால் அப்துல் கலாம், ஆப்ரகாம் லிங்கன் போல் வாழ்வில் உயரலாம்.

    நம்பிக்கை, முயற்சி, உழைப்பு இம்மூன்றையும் தாரக மந்திரமாக கொண்டு உசேன்போல்ட் மற்றும் ஜஸ்டின் போன்ற விளையாட்டு வீரர்கள் போல் உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கைவைத்தால் ஜெயிக்கலாம். ஒழுக்கமுள்ள மாணவன் ஒரு சமுதாயத்தை உருவாக்கலாம், ஆகவே நீங்கள் அனைவரும் ஒழுக்கத்தை பேணி பெற்றோறை பாதுகாத்து அனைத்து வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் என்றார்.

    விழாவில் தாளாளர் ராமையா மற்றும் திட்ட இயக்குநர் லோகநாதன் மற் றும் கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டு பட்டயம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக் களை தெரிவித்தனர். கல்லூரி உப தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.
    Next Story
    ×