search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்மரகம் கடத்தியதாக 4 பேர் கைது: ஆந்திரா போலீசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
    X

    செம்மரகம் கடத்தியதாக 4 பேர் கைது: ஆந்திரா போலீசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

    செம்மரம் கடத்தியதாக கைதான 4 பேரை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர காவல்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    செம்மரம் கடத்தியதாக கைதான 4 பேரை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர காவல்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை மண்ணடியை சேர்ந்த சையது இப்ராகிம், ரவேல் குழந்தை ராஜா, நாகூர் கனி, முகமது இக்பால் ஆகியோர் செம்மரம் கடத்தியதாக ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்ட காவல்துறையின ரால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், இந்த 4 பேரையும் கைது செய்து ஆந்திர காவல்துறை சட்ட விரோத காவலில் வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்கக்கோரியும் சையது இப்ராகிமின் மனைவி சையது ராபியா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், எம்.வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த மனு குறித்து திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 31-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #tamilnews
    Next Story
    ×