search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் ரேசன் பொருட்களை கடத்தி விற்கும் ஊழியர்கள்
    X

    கொடைக்கானலில் ரேசன் பொருட்களை கடத்தி விற்கும் ஊழியர்கள்

    கொடைக்கானலில் ரேசன் பொருட்கள் கடத்தி விற்கப்படுவதால் பயனாளிகளுக்கு கிடைப்பது இல்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நராட்சி பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 2 இடங்களில் அமுதம் அங்காடி மூலம் ரேசன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த கடைகளில் மட்டுமே பொருட்கள் சீராக வழங்கப்படுகிறது.

    இது தவிர கொடைக்கானல் டவுன், மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டுறவு சங்கம் மூலம் ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மாதத்திற்கு ஓரிரு நாட்கள் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகிறது.

    மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு நாளும், கடைசி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகிறது. பொருட்கள் வழங்கப்படும் நாளில் பொதுமக்கள் சென்றால் மட்டுமே ரேசன் பொருட்கள் வாங்க முடியும் நிலை உள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுவதற்காக அமைக்கப்பட்ட ரேசன் கடைகளில் பொருட்கள் கிடைப்பது அரிதாகவே உள்ளது.

    கொடைக்கானல் மலை கிராமங்களில் உள்ள கடைகளில் பொருட்களை விற்பனையாளர்களே கடத்தி விற்று விடுகின்றனர். விவசாய கூலி மற்றும் கட்டிட வேலைக்கு செல்பவர்கள் ரேசன் கடையில் பொருட்கள் கிடைக்காமல் சிரமத்தில் தவித்து வருகின்றனர். பல நாட்கள் ரேசன் கடைகள் பூட்டியே கிடக்கிறது என்றனர்.

    இது குறித்து விற்பனையாளர்களிடம் கேட்டால் கொடைக்கானல் பகுதியில் ரேசன் பொருட்கள் வரும் அளவே குறைவாகத்தான் வருகிறது.

    இதில் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளுக்கு கொடுக்க வேண்டி உள்ளது. இதனால் பல நேரங்களில் மக்களுக்கு பொருட்களை தடையின்றி கொடுக்க முடியவில்லை என்று தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×