search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடி அருகே மணல் அள்ளிய ஜே.சி.பி. வாகனத்தை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம்
    X

    போடி அருகே மணல் அள்ளிய ஜே.சி.பி. வாகனத்தை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம்

    போடி அருகே மணல் அள்ளிய ஜே.சி.பி. வாகனத்தை சிறை பிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போடி:

    போடி அருகே சின்னபொட்டிபுரம் கிராமத்தில் பட்டா நிலங்களில் தூசு மணல் அள்ளிக் கொள்ளலாம் என தேனி மாவட்ட கனிம வளத்துறையினர் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் சிலர் அளவுக்கு அதிகமாக பல அடி ஜே.சி.பி. எந்திரங்களைக் கொண்டு மணல் அள்ளுவதால் அப்பகுதி முழுவதும் பெரும் பள்ளங்கள் உருவாகியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கும் என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

    சின்னபொட்டிபுரம் பகுதியில் ஜே.சி.பி. எந்திரம் மற்றும் 40-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளைக் கொண்டு மணல் அள்ளினர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் கார்த்தி ராஜன் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்று வாகனங்களை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    இது குறித்து அறிந்ததும் விரைந்து சென்ற போடி தாலுகா இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலதி, சப்-இன்ஸ் பெக்டர் அப்துல்ரஹிம், தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews

    Next Story
    ×