search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணா நீரை திருடும் ஆந்திர விவசாயிகள்: பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
    X

    கிருஷ்ணா நீரை திருடும் ஆந்திர விவசாயிகள்: பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீரை ஆந்திர விவசாயிகள் திருடுவதை தடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 27-ந் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் கடந்த 1-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது.

    மறு நாள் பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. முதலில் கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டனர். பின்னர் 2150 கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

    பூண்டி ஏரிக்கு முதலில் 20 அடி வீதம் பின்னர் படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. 16ந் தேதி அதிகப்படியாக வினாடிக்கு 325 கனஅடி தண்ணீர் வந்தது.

    இதற்கிடையே கிருஷ்ணா நீர் வரும் கால்வாய்களில் மின் மோட்டார்களை வைத்து ஆந்திர விவசாயிகள் தண்ணீரை திருடி தங்களது நிலங்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

    இதனால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. இந்த நீர் தற்போதை படிப்படியாக குறைந்து 283 அடியாக ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பூண்டி ஏரிக்கு வரும் நீர் மேலும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எனவே ஆந்திர விவசாயிகளின் தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த ஆண்டு இதேபோல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்ட போதும் தண்ணீர் திருட்டு நடந்தது. அப்போது தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசிடம் தண்ணீர் திருட்டை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி ஆந்திர அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து தண்ணீர் உறிஞ்சிய ஏராளமான மோட்டார்களை பறிமுதல் செய்தனர். இதன் பின்னர் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்தது.

    எனவே ஆரம்பத்திலேயே தமிழக அதிகாரிகள் கிருஷ்ணா நீரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
    Next Story
    ×