search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடுகளுக்கு நேரடியாக மது விற்க முடிவு: ராமதாஸ் கண்டனம்
    X

    வீடுகளுக்கு நேரடியாக மது விற்க முடிவு: ராமதாஸ் கண்டனம்

    உயர் வகை மதுபானங்களை வாடிக்கையாளர்களின் வீடு தேடிச் சென்று விற்பனை செய்ய உள்ளதாக வெளியான தகவலுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெடுஞ்சாலைகளில் 1000 மதுக்கடைகளைத் திறந்த தமிழக அரசு, அடுத்தக் கட்டமாக மேலும் 500 மதுக்கடைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

    மற்றொருபுறம் உயர் வகை மதுபானங்களை வாடிக்கையாளர்களின் வீடு தேடிச் சென்று விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக செல்பேசி செயலி உருவாக்கப்பட்டிருப்பதாகவும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

    சென்னையில் 30 இடங்களில் செயல்பட்டு வரும் எலைட் மதுக்கடைகளில் உள்ள உயர் வகை மதுக்களின் விவரங்கள் செயலியில் இடம் பெற்றிருக்கும் என்றும், தங்களுக்கு தேவையான மதுவகைகளை தேர்வு செய்து பணம் செலுத்தினால் உடனடியாக அவை வாடிக்கையாளரின் முகவரியில் வழங்கப்படும் என்றும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் முற்போக்காக சிந்திந்து, புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துவது தான் அரசின் கடமையாகும்.

    தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, இரு கட்டங்களாக 1000 மதுக்கடைகளை மூடியது. தமிழக அரசின் கொள்கை முடிவின்படி பார்த்தாலும் நடப்பாண்டில் 500 மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்.

    ஆனால், அது குறித்து ஆளுனர் உரையிலோ, அதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதலமைச்சரின் பதிலுரையிலோ எந்த அறிவிப்பும் இல்லை. மாறாக, மூடப்பட்ட 1000 மதுக்கடைகளுக்கு பதிலாக 1000 புதியக் கடைகள் கடந்த சில மாதங்களில் திறக்கப்பட்டன. இப்போதும் கூடுதலாக 500 மதுக்கடைகள் திறக்கப்படவுள்ளன. இது படிப்படியான மதுவிலக்கு அல்ல.... மதுப்பெருக்கு என்பதை பினாமி ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

    மது விற்பனையை பெருக்குவதன் மூலம் அரசின் வருவாய் சில ஆயிரம் கோடிகள் வேண்டுமானால் அதிகரிக்கலாம்... இது தமிழகத்தின் பிரச்சனைகளை தீர்க்காது. மாறாக மதுக்கடைகளை மூடினால் அரசின் நேரடி வருமானம் ரூ.30,000 கோடி அளவுக்கு குறையலாம்.

    எனவே, புதிய மதுக்கடைகள் திறப்பது, வீடுகளுக்கு நேரடியாக மது வணிகம் செய்வது போன்ற பயனற்ற வேலைகளை விடுத்து, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண் டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Tamilnews #PMK
    Next Story
    ×