search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்: பொன்னேரியில் 25-ந்தேதி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்
    X

    அ.தி.மு.க. வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்: பொன்னேரியில் 25-ந்தேதி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்

    அ.தி.மு.க. மாணவரணி சார்பில் வரும் 25-ம் தேதி பொன்னேரியில் நடைபெற உள்ள வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றுகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25-ம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் கண்டிராத ஒரு மாபெரும் புரட்சியாகும். அந்த தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவது நமது கடமையாகும்.

    அன்னைத் தமிழுக்காக ஆவி துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாணவர் அணியின் சார்பில் 25-ந்தேதி (வியாழக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் “வீர வணக்க நாள் பொதுக் கூட்டங்கள்” நடைபெற உள்ளன.

    பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

    கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்பு கொண்டு, வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    இதன்படி பொன்னேரியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதில் நடிகர் ராமராஜன், கமலக்கண்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பாபு, சிறுணியம் பலராமன், முல்லைவேந்தன் பங்கேற் கிறார்கள்.

    தாம்பரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார். இதில் அப்துல் அமீது, முன்னாள் அமைச்சர் மோகன், பாடகி கலா, ஜெமினி ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஜி.எம். சாந்தகுமார் பங்கேற்கிறார்கள்.

    வடசென்னையில் அவைத் தலைவர் மதுசூதனன், தாடி ம.ராசு, மருதுஅழகு ராஜ், மனோஜ்பாண்டி யன், மாதவரம் மூர்த்தி, அமர நாதன், கோடையிடி சுப்பையா, டேவிட் ஞானசேகரன் பங்கேற்கின்றனர்.

    காஞ்சீபுரம் மேற்கு மாவட்டத்தில் கே.பி.முனுசாமி பேசுகிறார். இதில் மைதிலி திருநாவுக்கரசு, மைத்ரேயன் எம்.பி., ஆலந்தூர் பகீம், புலவர் சோமுசா, பிராட்வேகுமார், பாஸ்கர், வாலாஜாபாத் கணேசன், வள்ளிநாயகம் பங்கேற்கிறார்கள்.

    தென்சென்னை தெற்கு மாவட்டத்தில் தம்பித்துரை எம்.பி. பா.வளர்மதி, நவ நீதகிருஷ்ணன் எம்.பி., எம்.டி.பாபு, முருகுமணி, கோபி, விருகை ரவி எம்.எல்.ஏ., ராமலிங்கம் பங்கேற்கிறார்கள்.

    வடசென்னை தெற்கு மாவட்டத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், வரகூர் அருணா சலம், நிர்மலா அருள்பிரகாஷ், எழில் ஏழுமலை, பாலகங்கா, கோபால் பேசுகிறார்கள்.

    தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அமைச்சர் பென்ஜமின், கவிதா கிருஷ்ணமூர்த்தி, டி.கே.எம்.சின்னையா, லியாகத் அலிகான், சபாபதி, செந்தில்வேல் பேசுகிறார்கள்.

    இதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.

    Next Story
    ×